இயற்கை முறையில் கவர்ச்சியான சருமம்!!

தங்கம் போல் தோற்றம் பெற, வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 15 நிமிடம் ஊற வைத்த பிறகு நன்றாக தேய்த்து குளியுங்கள்.

அதன் பின் சோப்பு போடக் கூடாது. அதன்பிறகு, பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.

சருமத் தோல் நிறமேறும். மிக மென்மையாக மாறும். தினமும் முடியா விட்டாலும் வாரத்துக்கு 3 நாட்கள் உபயோகி யுங்கள். அற்புதமான மூலிகை மருந்து இது. குறிப்பாக வெயில் காலத்தில் பயன்ப டுத்துங்கள்.

வறண்ட சருமம் பெற்றவர்கள் ரோஸ் வாட்டரில் சிறிது தேன் கலந்து முகம் கழுத்தில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் ஆழமாக உள்ள அழுக்கு, இறந்த செல்கள் வெளிவந்து விடும். ஈரப்பதமும் அளிக்கும். மற்ற அழகு சாதனங்கள் போல் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாது.

You might also like