இராவணகோட்டத்தில் நாயகியாக ஆனந்தி!!

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இராவணகோட்டம்’ படத்தின் நாயகியாக ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’. விமர்சன ரீதியாக பலரும் கொண்டாடிய படம். ஆனால் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
கதிர், ஓவியா, கலையரசன், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.

அப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்து தன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார் விக்ரம் சுகுமாரன். ‘இராவணகோட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகனாக சாந்தனு
நடிக்கவுள்ளார். தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதைக்களத்துக்கு தகுந்தாற் போல் நாயகியைத் தேடி வந்தனர். இறுதியாக ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்துக்கு ஒரு பாடலை முடித்துக் கொடுத்துள்ளார்
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். அதன் படப்பிடிப்போடு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

You might also like