இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு – வரிஅதிகரிக்கப்படும்!!

உள்ளூர் பழ உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கும், இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புத்தளம் – தலவில பகுதியில் நடைபெற்ற கிராம சக்தி நிகழ்வில் கலந்து கொண்ட அரச தலைவரை,  பழ உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

இதன் போது விவசாய உபகரணங்களுக்கான தட்டுப்பாடு, உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பழங்களின் இறக்குமதி காரணமாக தமது தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு பழ உற்பத்தியாளர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உற்பத்தியாளர்களிடம் அரச தலைவர் உறுதி அளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close