இலங்கை சீனா இடையே- 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!!

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான 03 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like