இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிஹ்க்கும் இடையில் சந்திப்பொன்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீஷெலுக்கான இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தை நிறைவுசெய்துகொண்டு நாட்டுக்கு திரும்பிய வேளையில், மாலைதீவி ஜனாதிபதி இலங்கையூடாக சிங்கப்பூர் நோக்கிப் பயணமாக விருந்தார்.
அந்தத் தருணத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.