உயரம் பாய்தலில் மகாஜனக் கல்லூரிக்கு தங்கம்!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 20 வயதுப் பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி ஹெரினா தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற போட்டியில் ஹெரினா தங்கப்பதக்கத்தையும், றூப சஜன்சி வெள்ளிப்பதக்கத்தையும், நிசாந்தினி வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

You might also like