உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு!!

கப்பலுடன் படகு மோதி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மீனவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீனவப்படகுடன் மோதிய கப்பல் தொடர்பில் இலங்கை கடற்படை ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற நேரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், விபத்துடன் தொடர்புடைய கப்பலை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று கப்பலுடன் மோதியதில் நான்கு மீனவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close