side Add

எரிபொருள்களின் விலை- மீண்டும் அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

95 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130  ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like