ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு மணிவிழா நிகழ்வு

0 498

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றி தனது 33 வருட ஆசிரிய சேவைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திருமதி சாரதபவானி சுந்திரலிங்கத்தின் மணிவிழா நிகழ்வுகள்  இன்று  இடம்பெற்றன.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபர் ந.ஜெயக்குமாரன் தலைமையில் கலைமன்ற கலாசார மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் வரவேற்புரையினை ஆசிரியர் திருமதி ட. ரஜித்குமாரும் ஆசியுரையினை சிவஸ்ரீ வி.பாலகுமாரக் குருக்கள் வண.பிதா என்.வி.ஜெயநேசன் ஆகியோரும் நிகழ்த்தினர்.
நிகழ்வில், தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்விஅபிவிருத்தி) திருமதி சி.சிவநாதன், ஓய்வுநிலை உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.குமாரசாமி, ஓய்வுநிலை அதிபர் சி.பவளேந்திரன், ஓய்வுநிலை ஆசிரியர் ச.மார்க்கண்டு, தென்மராட்சி கல்வி வலய சைவ சமய பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் செல்வி இ.இராமலிங்கம், ஆசிரியர்களான திருமதி ம.புஷ்பராணி திருமதி இ.பிரான்சிஸ்கா,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like