side Add

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

கிளிநொச்சி உழவனுர் பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டது என்று கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார்.

52 போத்தல் கசிப்பு மற்றும் 5 பெரல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார்.

You might also like