கடல் சங்குகளுடன் ஒருவர் கைது!!

உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல், கடல் சங்குகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தாராபுரம் சந்தியில் உள்ள வீதி தடையில் வைத்து குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சங்கு மூடைகள் மீட்கப்பட்டன.

சங்குகளை கொண்டு சென்ற நபரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like