கறிவேப்பில்லை தரும் உடல் ஆரோக்கியம்!!

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலை செரிமானப் பிரச்சினைகளைப் போக்கும். செரிமானப் பிரச்சினைகளால் தான் உணவில் உள்ள கொழுப்பு அப்படியே வயிற்றில் படிந்து, உடல் எடையை அதிகரிக்கிறது.

காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொள்வதால் வாருங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய வகை செய்கிறது.பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது.

எனவே கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்களுக்கும் இது நல்லது. பொதுவாக கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். அதனால்தான் நம் சமையலில் கறிவேப்பில்லை அதிகமாக சேர்க்கப்படுகிறது.

ஆனால் கறிவேப்பிலையை நாம் சாப்பாட்டிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறோம். கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவுவதுடன், சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

அதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரோடு ஜூஸ் செய்து தேன் சேர்த்து குடித்து வரலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close