side Add

களவாக மின்சாரம் பெற்றவருக்கு -10 ஆயிரம் ரூபா தண்டம்!!

சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டு, குறித்த நபர் 10 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

பொதுமக்கள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து சாவகச்சேரிப் பொலிஸார் மட்டுவில் பகுதியில் உள்ள குறித்த வீட்டைச் சோதனையிட்டனர்.

அங்கு அவர் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்றமை கண்டு பிடிக்கப்பட்டது. குடியிருப்பாளர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்தது.

You might also like