side Add

காஜல் அகர்வாலின் அடுத்த படம் கமலுடன்!!

நடிகை காஜல் அகர்வால் தனது அடுத்தப் படம் கமல் ஹாசனுடன் என்று அறிவித்துள்ளார். இப்படம் 1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாகும்.

கமலின் 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லைகா புரொடக்‌ஷன்ஸ் ‘இந்தியன் 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஷங்கர், கமல் கூட்டணிக்கு மீண்டும் அடித்தளம் இட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 14ஆம் தொடங்குகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் மற்ற நட்சத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

You might also like