காஜல் அகர்வாலின் திருமண ஆசை!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியான காஜல் அகர்வாலுக்கு இன்னமும் திருமணம் ஆகாத நிலையில், தான் ஒரு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் என்று காஜல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார் காஜல் அகர்வால். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்துள்ளார். காஜல் அகர்வால் கிசுகிசுக்களில் அதிகம் சிக்காதவர்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில் ‘திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்கு பொருத்தமான என் மனதுக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமா துறை சம்பந்தப்பட்டவரையோ மணக்க மாட்டார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காஜல். நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் தனது திருமணத்தையும் ஒத்தி வைத்திருக்கிறார். காஜலின் தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதுடன் ஒரு குழந்தைக்கு தாய் ஆகவும் ஆகிவிட்டார். காஜலையும் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர்.

You might also like