காட்டுக்குள் கஞ்சா விற்க முயன்ற – மூவர் மடக்கிப் பிடிப்பு!!

யாழ்ப்பாணம் கீரிமலையில் 79 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வடமராட்சி மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை, கைமாற்றுவதற்கு தயாராக இருந்த போது, கடற்படையினரும், தேசிய போதை தடுப்பு பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொண்டு கஞ்சாவுடன் மூவரையும் கைது செய்தனர்.

34 பொதிகளில் தயார் செய்யப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like