காட்டு யானைகளின்- அச்சத்தில் கிராம மக்கள்!!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிவுக்குட்ட ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களுக்குள் தினமும் காட்டு யானைகளால் உள்நுழைந்து அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

மக்களின் இருப்பிடங்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்படுவதோடு, நீண்ட காலப் பயன் தரும் மரங்களான தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்டவையும், வீட்டுத் தோட்டப் பயிர்களும் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானைகளைத் விரட்டும்போது அவை மூர்க்கமடைந்து தாக்க வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிராம மக்களின் அச்சத்தைப் போக்கவும், தோட்டங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கும் காட்டுக்குள் யானைகளை விரட்டியதப்பதற்கு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உதவி புரிய வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like