கிரிக்கெட் தொடரில் அச்சுவேலி மத்தி அணி சம்பியன்!!

சு.தற்பரன் ஞாபகார்த்தமாக நடததப்பட்ட கிரிக்கெட் தொடரில் அச்சுவேலி மத்தி அணி சம்பியன் வென்றது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அச்சுவேலி மத்தி அணியை எதிர்த்து கோல்ஸ்ரார் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அச்சுவேலி மத்தி மத்தி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல்ஸ்ரார் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

You might also like