side Add

கிளி­நொச்­சிக்­கு பெரும் சவால்­கள் – வடக்கு ஆளு­நர் சுரேன் ராக­வன்!!

கிளி­நொச்­சிக்­கான சவால்­கள் இன்­னும் தீர்ந்­து­வி­ட­வில்லை. அவற்றை நாம் எதிர்­கொள்ள வேண்­டும் என்று தெரி­வித்­தார் வட­மா­காண ஆளு­நர் சுரேன் ராக­வன்.

வட­மா­காண ஆளு­நர் சுரேன் ராக­வன் கிளி­நொச்­சிக்கு நேற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டார். கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கத்­தில் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார் அவர்.

கிளி­நொச்­சி­யில் இரா­ணு­வம் மற்­றும் அதி­கா­ரி­கள் பொது­மக்­கள் ஆகி­யோர் இணைந்து மேற்­கொண்ட பணி­கள் கார­ண­மாக உயி­ரி­ழப்­புக்­கள் மற்­றும் பெரிய அழி­வு­க­ளில் இருந்து மக்­களை காப்­பாற்ற முடிந்­தி­ருக்­கி­றது.

அதற்­காக அனை­வ­ருக்­கும் நன்றி கூறு­கின்­றேன். கிளி­நொச்­சிக்­கான சவால்­கள் இன்­னும் தீர்ந்­து­வி­ட­வில்லை. அவற்றை நாம் எதிர்­கொள்ள வேண்­டும். அத்­தோடு எல்­லாத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்­கு­மி­டையே ஒருங்­கி­ணைப்பு, ஒத்­து­ழைப்பு இருக்க வேண்­டும். ஒரு­வர் செய்­கின்ற பணி இன்­னொ­ரு­வ­ருக்கு தெரி­யாது இருக்­கி­றது. இது கவ­லைக்­கு­ரி­யது.

அலுவலர்கள் றக்பி வீரர்­கள் போன்று இருக்க வேண்­டும். கோல்ப் வீரர்­கள் போன்று அல்ல. கோல்ப் விளை­யாட்டு வீரர்­கள் போன்று நாக­ரீ­க­மாக உடை­ய­ணிந்து, கண­வான்­கள் போன்று இருந்­தால் மக்­க­ளுக்கு பணி­யாற்ற முடி­யாது. தமிழ் மொழி எங்­கள் அடை­யா­ளம். பத்­தா­யி­ரம் வரு­டங்­கள் பழ­மை­வாய்ந்த மொழி உல­கில் உள்ள மூத்த பத்து மொழி­க­ளில் தமிழ் மொழி­யும் ஒன்று. இதனை ஹவார்ட் பல்­க­லைக் கழ­க­மும் ஆராச்சி மூலம் உறுதி செய்­தி­ருக்­கி­றது – என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

மாவட்­டச் செயலகத்­தில் இடம்­பெற்ற சந்­திப்­பைத் தொடர்ந்து ஆளு­நர் தலை­மை­யி­லான குழு­வி­னர் பன்­னங்­கண்டி பிர­தே­சத்­துக்­கும் சென்று அங்கு வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை நேரி­லும் ஆராய்ந்­த­னர். இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம், ஆளு­ந­ரின் செய­லா­ளர் இளங்­கோ­வன், பிர­தேச செய­லா­ளர்­கள், பிர­தேச சபைத் தவி­சா­ளர்­கள், திணைக்­கள் அதி­கா­ரி­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

You might also like