குடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த சிறுமி!!

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சிறுமி குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் நாவறட்சியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளான குருப்ரீத் கவுரும் இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியைச் சென்றடைந்தனர்.

பாலைவனத்தில் சுட்டெரிக்கும்வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர்.

அவர்களின் காலடித்தடங்களை மோப்பம் பிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிரமாக பின் தொடர்ந்தனர்.

தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண் வேறொரு பெண்ணுடன் புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 27 கிலோமீற்றர் தூரத்தில் லூக்வில்லி என்ற இடத்தின் அருகே கொளுத்தும் வெயிலில் தனியே இருந்த குருப்ரீத் கவுர் நாவறண்டு துடிதுடித்து உயிரிழந்தார்.

அதற்கிடையில் அவர்கள் இருந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் சிறுமியின் உயிரிழப்புக்கு ஆள்கடத்தல் முகவர்கள் தான் காரணம் என்று குற்றஞசாட்டியுள்ளனர்.

You might also like