குண்டு வெடிப்பின் பின்னரான நிலமை- மன்னாரில் கலந்துரையாடல்!!

நாட்டின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடு பிடிகள் மற்றும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் பங்கு பற்றுதலுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது

மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

You might also like