குருநாகல் மாவட்டத்துக்கு- ஹக்கீம் குழு விஜயம்!!

குருநாகல் மாவட்டத்தில் இனவாதக் குழுக்களின் தாக்குதலுக்குள்ளான ஹெட்டிபொல, கொட்டம்பிட்டிய, குளியாப்பிட்டிய, மடிகே, அனுக்கண, எஹட்டுமுல்ல, பண்டாரகொஸ்வத்த, தொஹரகொடுவ போன்ற பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று நேரடியாகச் சென்றிருந்தார்.

அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டதுடன், நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.

அமைச்சருடன், இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலிசாஹிர் மெளலானா, மாகாணசபை முன்னாள் உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்சா ஆகியோரும் சென்றிருந்தனர்.

You might also like