குழந்தை இறப்பில் சந்தேகம் -பொலிஸார் விசாரணை!!

சந்தேகத்துக்கிடமான முறையில், சடலப் பரிசோதனைகள் ஏதும் மேற்கொள்ளாது, உயிரிழந்த குழந்தையொன்றை அடக்கம் செய்ய முற்பட்ட பெற்றோர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள வீடொன்றில் 2 வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதையடுத்து, நேற்று இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன.

உடலில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாவே, குழந்தை உயிரிழந்துள்ளது, எனக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, உயிரிழந்த குழந்தையின் காலில் தீக்காயம் இருந்தமை கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று சடலப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close