கூட்­ட­மைப்­பின் தலை­மைக்குப் பொருத்­த­மா­ன­வர் யார்?

3 629

கூட்­ட­மைப்­பின் அடுத்த தலைமை தொடர்­பாக இப்­போதே கேள்­வி­கள் எழ ஆரம்­பித்து விட்­டன. சம்­பந்­தன் மூப்­பின் இறு­திக் கட்­டத்தை எட்­டி­விட்­ட­தால் இந்­தக் கேள்­வி­கள் எழு­வது இயல்­பா­னது.

இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் மு.கரு­ணா­நி­தி­யும் மூப்­பின் எல்­லை­யில் நின்­ற­போது தி.மு.கவுக்கு அடுத்த தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. ஆனால் வாரிசு அர­சி­ய­லில் ஊறிப்­போன இந்­தி­யா­வில் வழக்­கம்­போல கரு­ணா­நி­தி­யின் மகன்­க­ளில் ஒரு­வ­ரான மு.க. ஸ்டாலி­னின் பெயர் நீண்ட கால­மா­கவே அந்­தப் பத­விக்கு அடி­பட்டு வந்­தது. இதற்கு ஏற்­றாற்­போன்று தி.மு.கவின் செயல் தலை­வ­ராக அவர் அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான அவ­ரது தந்­தை­யா­ரான கரு­ணா­நி­தி­யால் நிய­மிக்­கப்­பட்­டார்.

கரு­ணா­நி­தி­யின் மறை­வுக்­குப் பின்­னர் கட்­சி­யின் பொதுக்­குழு அவ­ரையே தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­தது. இந்­தி­யா­வைப் பொறுத்­த­வ­ரை­யில் இவ்­வாறு பல உதா­ர­ணங்­க­ளைக் கூற முடி­யும். ஆனால் கூட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் அந்த நிலை காணப்­ப­ட­வில்லை. சம்­பந்­த­னின் வாரி­சாக எவ­ருமே அடை­யா­ளம் காட்­டப்­ப­ட­வு­மில்லை.

தமிழ்­மக்­கள் வரா­லற்­றில் மிக மோச­மா­ன­தொரு கால­கட்­டத்­தி­லுள்­ள­னர். போர் ஏற்­ப­டுத்­திய வடுக்­கள் இன்­ன­மும் மறை­ய­வில்லை.
பல பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் அவர்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இனப் பி­ரச்­சி­னைக்­கு­ரிய அர­சி­யல் தீர்வு அவர்­க­ளது கண்­ணுக்­கெட்­டிய தொலை­ வில் கூடத் தென்­ப­ட­வில்லை.

அவர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்த புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­க­மும் கன­வாய்ப் போய்­வி­டுமோ? என்­றொரு நிலை­யும் காணப்­ப­டு­கின்­றது. இதை­விட ஒற்­று­மை­யி­ழந்த தமி­ழர்­கள் வெவ்வேறு திசை­க­ளில் தமது எண்­ணம்­போன்று பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். கூட்­ட­ மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் அந்த அமைப்பை அழித்து விடு­வ­தி­லேயே குறி­யா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர். கூட்­ட­மைப்பை வசை­பா­டு­வதே இவர்­க­ளின் வேலை­யா­கப் போய்­விட்­டது. இதற்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய தேவை­யும் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்­ளது.

சம்­பந்­த­னின் சாணக்­கி­யம்
தொட­ரு­தல் வேண்­டும்
சம்­பந்­த­னின் சாணக்­கி­யம் தற்­போ­து­வரை கூட்­ட­மைப்­பைப் பாது­காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அவ­ருக்­குப் பிறகு இது நீடிக்­குமா? என்­ப­து­தான் இன்று எழுந்­துள்ள கேள்­வி­யா­கும். இந்­தக் கேள்­விக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ ப­வன் ஆஸ்­ரே­லி­யா­வில் வைத்­துக் பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார். சம்­பந்­தன் தமக்­குள்ள அனு­ப­வத்­தைக் கொண்டு கூட்­ட­மைப்­பைச் சரி­யான திசை­யில் நகர்த்­திக் கொண்­டி­ருக்­கி­றார். ஆனால் அனு­ப­வம் இல்­லா­த­வர்­கள் அவர்­போன்று செயற்­பட முடி­யாது.

கூட்­ட­மைப்­பின் அடுத்த தலைமை தொடர்­பா­கப் பல­ரும் பல்­வேறு வித­மா­கப் பேசு­வார்­கள். ஆனால் பொதுக்­கு­ழு­தான் இதை முடி­வு­செய்ய வேண்­டும். பொதுக்­கு­ழு­வில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் பொருத்­த­மான தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுப்­பார்­கள் என்­றும் அவர் கூறி­ யி­ருக்­கி­றார். ஆகவே கூட்­ட­மைப்­பின் பொதுக்­குழு சரி­யான முடிவை எடுக்க வேண்­டும்.

போர் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது ஈழத் தமி­ழர்­க­ளின் தலை­வ­ராக மட்­டு­மன்றி உல­கம் முழு­வ­தும் பரந்து வாழ்­கின்ற தமி­ழர்­க­ளின் தலை­வ­ரா­க­வும் ஒரு­வர் அடை­யா­ளம் காணப்­பட்­டி­ருந்­தார். அவ­ரது ஆணையை ஏற்­ப­தற்­கும் அனைத்­துத் தமி­ழர்­க­ளும் தயா­ராக இருந்­தார்­கள்.

இன்று அந்­தப் பொறுப்­பைப் கூட்­ட­ மைப்பு ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. சம்­பந்­தன் அதன் தலை­வ­ராக உள்­ளார். தமி­ழர்­கள் சம்­பந்­த­னின் ஆணையை ஏற்று மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­த­தன் கார­ண­மா­கவே அவ­ரால் அரச தலை­வர் பத­வி­யில் அமர முடிந்­தது. இதன் மூல­மா­கத் தமி­ழர்­க­ளின் தலை­வர் சம்­பந்­தனே என்­பது நிரூ­ப­ண­மா­கி­ யது. இதே­நிலை தொட­ர­வேண்­டு­மா­னால் சம்­பந்­த­னுக்கு ஈடா­ன­தொரு தலை­வரே தெரி­வாக வேண்­டும்.

பொதுக்­கு­ழு­வுக்கு
பொறுப்­புண்டு
எந்­தக் கட்­சி­யி­லும் அதன் பொதுக்­கு­ழு­வுக்கே அதிக அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்த வகை­யில் கூட்­ட­மைப்­பின் அடுத்த தலை­மை­யை­யும் அதன் பொதுக்­கு­ழுவே தீர்­மா­னிக்க வேண்­டும்.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்­த­தில் பொதுக்­கு­ழு­வின் அங்­கீ­கா­ரம் பெறப்­பட்­டதா? எனச் சிலர் கேள்வி எழுப்­பக்­கூ­டும். கூட்­ட­ மைப்­பின் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­தனே அந்த முடிவை எடுத்­தார். இதற்­குப் பலர் எதிர்ப்­புத் தெரி­வித்­த­போ­தி­லும் சம்­பந்­த­னின் முடி­வில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

அவ­ரது அர­சி­யல் சாணக்­கி­யம் விக்­னேஸ்­வ­ர­னின் விட­யத்­தில் தோல்­வி­யையே தழு­வி­யது.
தமி­ழர்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­க­ளான கூட்­ட­மைப்­பி­னர் தமது எதிர்­கா­லத் தலைமை தொடர்­பா­கத் தீர்க்­க­மான முடி­வொன்றை மேற்­காள்ள வேண்­டும். அந்­தப் பத­விக்­குப் பொருத்­த­மான ஒரு­வ­ரையே தெரி­வு­செய்ய வேண்­டும். ஏனெ­னில் இது தமி­ழர்­க­ளின் அர­சி­யல் எதிர்­கா­லம்.

You might also like