கேணல் ரத்னபிரிய விவகாரம்- அரச தலைவருக்கு விமல் உருக்கமான கடிதம்!!

விஸ்வமடுவில் கடமையாற்றிய கேணல் ரத்னபிரியவின் விடயம் பிரியாவிடை நிகழ்வு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரச தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மக்களின் கோரிக்கைக்கு அமைய கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த, லெப்டினென்ட் கேணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ, சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் விஸ்வமடு பகுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது, அப்பகுதி மக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close