சகல துறை­க­ளி­லும் பெல்­ஜி­யம் அசு­ர­ப­லம்

பெல்ஜியம் அணி உல­கக் கிண்­ணத் தொட­ரில் 13ஆவது முறை­யாக கலந்துகொள் கி­றது. 1986ஆம் ஆண்டு தொட­ரில் நான்­கா­வது இடத்­தைப் பிடித்­ததே அந்த அணி ­யின் அதி­க­பட்ச சாத­னை­யாக உள்­ளது. தகு­திச் சுற்­றில் ஐரோப்­பிய கண்­டங்­க­ளில் ஹெச் பிரி­வில் இடம்­பெற்ற பெல்­ஜி­யம் 10 ஆட்­டங்­க­ளில் ஒன்­ப­தில் வெற்­றி­பெற்று ஆதிக்­கம் செலுத்­தி­யது. ஒரு ஆட்­டத்தை சமன் செய்­தி­ருந்­தது.

ரெட் டெவில்ஸ் என செல்­ல­மாக அழைக்­கப்­ப­டும் பெல்­ஜி­யம் அணி தகு­திச் சுற்­றில் 43 கோல்­களை அடித்த நிலை­யில் வெறும் 6 கோல்­களை மட்­டுமே வாங்­கி­யது. அதி­க­பட்­ச­மாக ரோமலுல காகு 11 கோல்­கள் அடித்­தி­ருந்­தார். அணித் தலை­வர் ஈடன் ஹஸார்டு 6 கோல்­கள் அடித்த நிலை­யில், 5 கோல்­கள் அடிக்க உதவி புரிந்­தார்.

பெல்­ஜி­யம் அணி அனைத்­துத் துறை­க­ளி­லும் சிறந்து விளங்­கு­கி­றது. கோல் காப்­பா­ள­ராக திபட் கோர்­டோஸ் பலம் சேர்க்­கி­றார். ஜோன் வெர்­டோ­கன், டோபி ஆல்­டர்­வெர்ல்ட், வின்­சென்ட் கோம்­பனி ஆகி­யோர் டிபன்­ஸி­லும், மவுஸா டெம்­பிளே, ராட்ஜா நாயிங்­கோ­லன், கெவின் டி புருனே ஆகி­யோர் சென்ட்­ரல் மிட்­பீல்­டி­ லும் வலு சேர்க்­கின்­ற­னர்.

கெவின் டி புருனே, இந்த சீச­ னில் மன்­செஸ்­டர் அணிக்­காக 8 கோல்­கள் அடித்­தி­ருந்­தார். மேலும் 15 கோல்­கள் அடிக்க உதவி புரிந்­தி­ருந்­தார்.
ஹஸார்டு, டிரஸ் மெர்­டன்ஸ் ஆகி­யோர் தலை­சி­றந்த விங் கர்­க­ளாக உள்­ள­னர். இவர்­கள் முன்­க­ளத்­தி­லும் சிறந்த திறனை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வர்­கள்.

ஸ்டிரைக்­க­ரான ரோமலு லகாகு, இந்த சீச­னில் பிரி­மீ­யர் லீக் தொட­ரில் சிறந்த பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்­தார். இம்­முறை அணி­யில் உள்ள பெரும் பாலான வீரர்­கள்­தான் கடந்த 2014 உல­கக் கிண்­ணத் தொட­ரி­லும், 2016ஆம் ஆண்டு யூரோ கிண்­ணத் தொட­ரி­லும் விளை­யா­டி ­னார்கள். ஆனால் எதிர்­பார்த்த அள­வுக்கு சிறந்த திறனை அவர்­கள் வெளிப் படுத்­த­வில்லை.

வெற்­றிக்­கான மனப்­பாங்­கும், வியூ­கங்­க­ளும் இல்­லா­தது நட்­சத்­திர வீரர்­க­ளையே ஏமாற்­றம் அடை­யச் செய்­தது. இத­னால் இம்­முறை உயர்­மட்ட அள­வி­லான ஆட் டத்தை விளை­யாட வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ள­னர் பெல்­ஜி­யம் வீரர்­கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close