சட்ட வேலி பாய்தலில்- திருவையாறு மாணவிக்கு தங்கம்!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 20 வயது பெண்ளுக்கான 400 மீற்றர் சட்ட வேலி பாய்தல் போட்டியில் திருவையாறு மகா வித்தியாலய மாணவி அனுசியா தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி கஜன்சிகா வெள்ளிப்பதக்கத்தையும், பரப்பாண் கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி தர்சிகா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

You might also like