side Add

சர்கார் டீசர்  அடுத்த வாரம் வெளிவரும்!!

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

சர்கார் படத்தின் டீசர்  எதிர்வரும்  19-ஆம் திகதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

You might also like