சவுதி இளவரசியின் பெறுமதிமிக்க நகை திருட்டு!!!

0 17

சவுதி இளவரசியின் 800,000 யூரோ பெறுமதியான நகையொன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸில் திருடப்பட்டுள்ளது.

பரிஸிலுள்ள றிட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் சவூதி இளவரசி தங்கியிருந்தபோது இவ்வாறு நகை திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நகை 800 ஆயிரம் யூரோ பெறுமதியென்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகை கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருடப்பட்டுள்ளதாக இளவரசியின் பணிப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி தங்கியிருந்த அறையில் எந்தவித தடயங்களும் உடைவுகளும் காணப்படவில்லையென்றும் அப்பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் கோடாரிகளைக் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று பரிசின் சிக் என்ற விடுதியில் கண்ணாடிகளைச் சேதப்படுத்தி பல மில்லியன் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தது.

எனினும், குறித்த விடுதி அமைந்திருக்கும் இடமானது மிகவும் பாதுகாப்பானதும் திருட்டுச் சம்பவங்கள் இதுவரை இடம்பெறாத ஒரு பகுதியென்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like