சிசிரிவி கமராவை அகற்றி- வீட்டில் திருடிய கில்லாடிகள்!!

சிசிரிவி கமரா உள்ளிட்ட உபகரணங்களை வீட்டிலிருந்து அகற்றி, பணம், தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து, வீட்டில் திருடப்பட்ட சிசிரிவி கமராவின் சில உதிரிப் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீட்டில் 2 பவுண் தங்க நகைகளும், 60 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவத்துடன் இன்னொருவர் தொடர்புடையதால், அவர் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like