சிறுமியின் வயிற்றில்-அரைக் கிலோ தலை முடி!!

ரஷ்யாவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 500 கிராம் எடையுள்ள தலை முடிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

முடி உதிர்வுக்குச் சிகிச்சை பெறச் சென்ற சிறுமிக்கு, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரு சோதனையில் அவருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட முழுமையான பரிசோதனையில், அவருடைய வயிற்றில் மர்ம பொருள் ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

சந்தேகமடைந்த மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது, 10 வருடங்களாக அவர் தனது சொந்த முடியை சாப்பிட்டு வருவது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது இரைப்பையில் இருந்து 500 கிராம் எடையிலான பந்து போன்ற தலை முடி அகற்றப்பட்டது.

You might also like