சிவகுரு பொற்பதிக்கு வெற்றி

0 24

சமநிலை தகர்ப்பு உதை மூலம் சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெறற்றது.நல்லூர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யபட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் அரையிறுதியாட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம் பெற்றது. முதலாவது அரையிறுதியாட்த்தில் சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக அணி மோதியது. ஆட்டத்தின் முதற் பாதியில் 16ஆவது நிமிடத்தில் சிவகுருரு பொற்பதி விளையாட்டுக்கழக அணியின் முதலாவது கோலினை பதிவு செய்தார் றிசாத். 1 :0 என்ற கோல் கணக்கில் பொற்பதி முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதிஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக அணியின் முதலாவது கோலினை சகாயம் பதிவு செய்ய ஆட்டம் சமநிலையில் முடிவடந்தது. ஆட்டம் சமநிலை தகர்ப்பு உதை மூலம் வெற்றி தீர்மானிக்கபட்டது. 3:0 என்ற கோல் கணக்கில் சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.

You might also like