side Add

சுரங்கத்தில் விபத்து- ஐவர் உயிரிழப்பு!!

நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்தில் உள்ள லோங்யான் பகுதியில் நேற்று நடந்துள்ளது.

சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.ஏனையவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You might also like