சுவையான சிக்கன் 65..!!

தேவையானவை

எலும்பில்லாத சிக்கன் – ஒரு கப்

சிக்கன் பவுடர் – ஒரு மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

கேசரி பவுடர் – கால் தேக்கரண்டி

பூண்டு – 3 பல்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தயிர் – கால் கப்

உப்பு – கால் தேக்கரண்டி

எண்ணெய் – கால் கப்

செய்முறை :-

எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவிச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

வேறொரு சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டைத் தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

தாளித்தப் பொருள்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 தயார்.

You might also like