சோர்வான கண்களைப் புத்துணர்ச்சியாக்கும் இரகசியம்!!

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கை துண்டாக நறுக்கி அதை கண்களில் வைத்து 15 – 20 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். சோர்வடைந்த கண்களை உற்சாகமாக்கும்.

பால் : பஞ்சை பாலில் நனைத்து அதைக் கண்களில் வைத்து 20-30 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். இது கண்களைக் குளிர்ச்சியாக்கி சோர்வை நீக்கும்.

வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயை சிறு துண்டாக நறுக்கி அதைக் கண்களில் வைத்து 25 நிமிடங்கள் ஓய்வெடுக்க கண்களின் சோர்வு நீங்கிவிடும்.

குளிர்ச்சியான நீர் : குளிர்ந்த நீரில் இரண்டு கரண்டிகளை 2 நிமிடம் ஊற வையுங்கள். தற்போது சில்லென இருக்கும் அந்த கரண்டிகளைப் கண்களில் ஒத்தி எடுங்கள். கண்களின் சோர்வு நீங்கும் வரை செய்து கொண்டே இருங்கள். சோர்வு நீங்கி விடும்.

முட்டையின் வெள்ளை : முட்டையின் வெள்ளையைக் கண்களில் தடவி 20 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். இதனால் கண்களில் உள்ள சோர்வு நீங்குவதை உணர்வீர்கள்.

தண்ணீர் அருந்துங்கள் : உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வந்தால் வேலை நேரத்தில் அதிகமாக நீர் அருந்திக் கொண்டே இருங்கள். இது உடலின் நீரேற்றத்தை அதிகரித்து கண் சோர்வை நீக்கும்.

You might also like