தங்கம்மா அப்பாக்குட்டியின்- குருபூசை நிகழ்வுகள்!!

தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினோராவது ஆண்டு குருபூசை நிகழ்வுகள் தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்றன.

செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வை.மனோமோகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மூத்த சிவாச்சாரிகளான சிவசிறி மகேஸ்வரக்குருக்கள் பாலசுந்தரக்குருக்கள், சிவசிறி சிவசாமிஐயர் குமாரராஜகுருக்கள்,பிரமசிறி முத்துசாமிஐயா பாலகுருசாமி சர்மா,சிவசிறி கிருஸ்ணசாமிக்குருக்கள் சதாசிவக்குருக்கள் ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

You might also like