தடம்புரண்டது பாரவூர்தி- 7 பேர் காயம்!!

உரம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி தடம்புரண்டது. விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து வவுனியா, மடுகந்த தேசிய பாடசாலைக்கு முன்பாக நடந்துள்ளது.

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி உரம் ஏற்றிச் சென்ற பாரவூர்தியே விபத்துக்குள்ளானது.

சாரதியால் பாரவூர்தியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து நடந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like