தனியார் மயப்படும் அரச காணிகள்!!

அரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றன என்று நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது .

நாவிதன்வெளி பிரதேசபையின் மாதாந்தக் கூட்டம் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அ.சுதர்சன், நாவிதன்வெளி பிரதேசத்தில் இணங்காணப்பட்ட அரச காணிகள் தனியாரால் கையகப்படுத்தப்படும் விவரத்தை சபையில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த தவிசாளர், நாவிதன்வெளி பிரதேசத்தில் அரச காணிகளைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நபர்களை , மக்களின் பிரதிநிகளான பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கம், பொது அமைப்புக்களின் துணையோடும் அடை யாளப்படுத்தி பிரதேச சபைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அரச காணிகளை தனியாரின் கையகப்படுத்தலின் காரணமாக பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு அரச காணிகள் இல்லாத நிலமை எதிர்காலங்களில் ஏற்படும். இதற்க ஒரு சில அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றார்.

You might also like