தமிழ் சினிமாவின் அடையாள நாயகனாக விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும், இவரது படங்களுக்கு எந்த விளம்பரங்களும் செய்யப்படுவதில்லை.

எனினும், படங்கள் அனைத்தும் ஹிட் மேல ஹிட் கொடுத்து விடுகிறது. உதாரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி படத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படத்திலும், தனது இயல்பான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தார். இன்றும் இப்படம் ரசிகர்கள் விரும்பும் படமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க, விக்ரம் வேதா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் மற்றும் 96 ஆகிய படங்கள் எல்லாவற்றிலும், தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அண்மையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில், பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, வந்த சேதுபதி படமும் இவருக்கு போலீஸ் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, போலீஸ் கதாபாத்திரம் கொண்ட படங்கள் விஜய் சேதுபதிக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்துவிடுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில், இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி, தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படங்களைத் தொடர்ந்து சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like