தற்கொலைதாரியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு!!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தீவிரவாதியில்  உடற்பாகங்களை காத்தான்குடியில் அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை என்று காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்தி, பொதுமக்களைக் கொலை செய்த பயங்கரவாதியான அசாத்
என்பரின் உடற் பாகங்களை எக்காரணம் கொண்டு காத்தான்குடியில் அடக்கம் செய்வதற்கு காத்தான்குடி
நகர சபை அனுமதி வழங்குவதில்லை எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

You might also like