தாக்குதலுக்கு தயாரான – மற்றொரு பயிற்சி முகாம் கண்டு பிடிப்பு!!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹாரான் உட்பட 36 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்று நுவரெலியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடிக் கட்டடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது.

சஹாரான் உட்பட 36 பேர் வரையில் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த 21 ஆம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ஆம் திகதி தாக்குதலுக்காக இறுதிப் பயிற்சியை இந்த கட்டடத்திலே மேற்கொண்டனர் என்று ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட பனியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like