தாய், பிள்ளைகள் மீது அசிட் வீச்சு!!

பெண் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் மீது அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபர் தானும் நஞசருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் கேகாலை கொடபொல பகுதியில் நடந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் மற்றும் குழந்தைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கனங்கபுர, கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் குறித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like