திட்டமிட்டப்படி பேச்சு நடக்கும்- அமெரிக்க அதிபர் அறிவிப்பு!!

வட கொரிய அதிபருடனான பேச்சு திட்டமிட்டவாறு சிங்கப்பூரில் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

வட கொரியாவின் மூத்த தூதுவரான கிம் யோங் கோலுடனாக பேச்சைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

வட கொரிய மூத்த தூதுவர், அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளதுடன் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பேயோவையும் சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், வௌ்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வழங்கிய கடிதமொன்றை வட கொரிய தூதுவர் அமெரிக்க அதிபரிடம் கையளித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சின் போது கொரியப் போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொரியப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், சமாதான முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் , திட்டமிட்டவாறு இம் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் பேச்சு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close