தினேஸின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்!!

இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸினது உடல் பெரியநீலாவணையில் பூரண பொலிஸ் மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதியஞ்சலி நிகழ்வில் பொலிஸார் மற்றும் படையினர், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வவுணதீவில் கடமையில் இருந்தபோது இனந்தெரியாகவர்களினால் தினேஸ் மற்றும் பிரசன்ன ஆகிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

You might also like