திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து!!

0 300

குவைத்தைச் சேர்ந்த புது மன தம்பதி ருமணம் ஆகி வெறும் மூன்று நிமிடங்களில் விவாகரத்து செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்குச் சிறிது காலம் ஆகும்.
அதற்குள் ஏற்படும் சர்ச்சரவுகளை ஆரம்பத்திலேயே தீர்க்காவிட்டால் அது விவாகரத்து வரை சென்று விடும்.

ஆனால்,குவைத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆன மூன்றே நிமிடத்தில் கணவனை விவாகரத்துச் செய்து அனைவரையும் அதிர்ச்சி மிரளவைத்துள்ளார்.

குவைத்தை சேர்ந்த ஒரு ஜோடி தங்களின் திருமணத்தைப் பதிவாளர் முன்னிலையில் நடத்தினர்.
திருமணத்தை அங்கீகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் போது மணமகன் பெண்ணை முட்டாள் என்று கூறியதால் ஆத்திரமடைந்த பெண் கணவரை அதே இடத்தில பரஸ்பர விவாகரத்து செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

மணப்பெண்ணின் முடிவிற்குப் பலர் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

 

You might also like