side Add

தீர்மானிப்பவர் நீங்களானால்- தீர்க்கமுடன் செயற்படுங்கள்!!

இலங்­கை­யின் அர­சி­யல் வர­லாற்­றுப் பார்­வை­யிலே கடந்த காலங்­களை எடுத்­து­நோக்­கின், பெரும்­பான்மை என்ற ‘மாயை’ சிறு­பான்­மை­யி­னரை ஆட்­டிப்­ப­டைக்­கும் செயற்­பா­டு­களே அர­சி­ய­லில் இருந்து வரு­கின்­றது. இன்­றும் அது இல்­லை­யென்று சொல்­வ­தற்­கில்லை. தமி­ழரை வசப்­ப­டுத்தி, வாக்­கு­று­தி­களை வழங்கி, ஏமாற்றி, அடி­மைப்­ப­டுத்தி தமது ஆட்­சிக்­கா­லங்­களை நிறை­வு­செய்த அர­சு­க­ளையே நாம் காண்­கி­றோம்.

எதி­ர­ணி­யில் இருந்­து­கொண்டு எதை­யும் செய்­யத் தீரா­ணி­யற்­ற­வர்­க­ளாகவே பெரும்­பான்­மை­யி­னர் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைக் கணித்து வைத்­தி­ருக்­கி­றார்­கள். முன்­னாள் தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக்க காலம்­தொட்டு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச காலம் வரை, இந்­தக் கணிப்பு நடை­மு­றை­யில் இருந்து வந்­தது. எல்­லா­வற்­றுக்­கும் ஒரு எல்­லை­யுண்டு. அதன்­பின்னே மாற்­றங்­கள் நிகழ்ந்தே தீரும்.

கால­மாற்­றத்­தின் விளைவு!
2015ஆம் ஆண்டு மாற்­ற­மு­டி­யாது என்று கரு­தப்­பட்ட, தமி­ழர் உரி­மைப் போராட்­டத்தை முடிவு றுத்திய அரசு என்று புக­ழப்­பட்ட முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சியை ஐ.தே.க.தலை­மை­யில் தமிழ், முஸ்­லிம், சிங்­கள மக்­கள் மற்­றும் கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து முடி வுக்குக் கொண்டுவந்தன.

பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரச தலை­வ­ராக்­கி­னர். தொடர்ந்து நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் ஐக்­கிய தேசி­யக் கட்சி வெற்­றி­பெற்று, சிறி­லங்கா சுதந்­திர முன்­ன­ணி­யும் இணைந்து நல்­லாட்சி அரசு ஆட்­சிக்கு வந்­தது. இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் இரண்­டா­வது முறை­யாக, தமி­ழர் ஒரு­வர் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக நிய­ம­னத்­தைப் பெற்­றுக்­கொண்ட மாற்­றம் நிகழ்ந்­தது. தவிர, கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திக­தி­வரை நல்­லாட்சி அரசு கட்­டுக்­கோப்­பாகவே இயங்கி வந்­தது.

ஆனா­லும் இடம்­பெற்ற 50 நாள் அர­சி­யல் குழப்­பங்­கள் கார­ண­மாக, “ஆட்­சி­மாற்­றம், தலைமை அமைச்­ச­ராக மகிந்த ராஜ­பக்ச நிய­ம­னம், மகிந்­த­ரா­ஜ­பக்ச தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை நிய­ம­னம், நாடா­ளு­மன்­றக் கலைப்பு, நீதி­மன்­றத் தடை உத்­த­ர­வு­கள், நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம், நம்­பிக்­கைத் தீர்­மா­னம், நாடா­ளு­மன்ற வன்­மு­றை­கள்” என எல்­லா­மும் நடந்­தே­றின. ஜன­நா­ய­கம் கேள்­விக்­கூ­றி­யா­னது.

வர­லாற்­றிலே அரச தலை­வர் ஒரு­வ­ரின் வேண்­டத்­த­காத செயற்­பாடு நாடா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளில் இடர்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­டன், நாடா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளி­லும் விரி­சல்­களை ஏற்­ப­டுத்­தி­யது. ஆட்சி மாற்­றத்­தின் பின்­பான நாடா­ளு­மன்ற அமர்­வு­கள் அத்­த­னை­யும் கேலிக்­கூத்­தாக மாறி­யது. அர­சி­யல் சூழ்ச்­சி­யின் விளை­வு­கள் உச்­சம் பெற்ற நிலை­யில் உயர்­நீ­தி­மன்­றத் தீர்ப்­பு­டன் இடைக்­கால அரசு பதவி வில­கி­யது. தற்­போது மீண்­டும் ஐக்­கிய தேசிய முன்­னணி சார்­பில் தலைமை அமைச்­ச­ராக ரணில்­விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிப் பொறுப்­பேற்­றுள்­ளார்.

வெற்­றி­யின் இர­க­சி­யம்!
ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான இரு பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளி­டையே ஏற்­பட்ட முறு­கல்­நிலை இறு­தி­யில் ஆட்­சி­மாற்­ற­மாக பரி­ண­மித்த போது மக்­கள் செய்­வ­த­றி­யாது அந்­த­ரித்­த­னர்.

இந்­த­வே­ளையிலே ­ஜே.வி.பி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஏனைய ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யில் இணைந்­தி­ருந்த கட்­சி­கள் ஜன­நா­யக மீற­லுக்கு எதி­ரா­கக் குரல்­கொ­டுத்­தன.

இதில் ஜன­நா­யக மீற­லுக்கு எதி­ரான உச்­ச­பட்ச எதிர்ப்புக் குர­லை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வெளிப்படுத்தியது. ஆட்­சி­மாற்­ற­முறை ஜன­நா­யக ரீதி­யில் இடம்­பெ­ற­வில்லை! என்­ப­தைச் சுட்­டிக்­காட்டி உயர்­நீ­தி­மன்­றில் முத­லில் வழக்­குத் தாக்­கல் செய்­தது.அது­த­விர நாடா­ளு­மன்­றத்­தி­லும் முன்­னின்று ஜன­நா­யத்­துக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பை வெளிக்­காட்­டி­யது. ஜன­நா­ய­கத்­துக்கு ஆத­ர­வான பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கும் செயற்­பாட்­டி­லும் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்­கும் சக்­தி­யாக தமிழ்க்­கூட்­ட­மைப்பே இருந்தது என்­பது எல்­லோ­ரும் அறிந்த விட­ய­மா­கும்.

வலை­யில் அகப்­பட்ட யானையை
சுண்­டெ­லி­தான் காப்­பாற்­றி­யுள்­ளது!
நல்­லாட்சி அர­சிலே இது­வ­ரை­கா­ல­மும் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட்டு, நல்­லாட்சி செயல்­நிலை பெறு­வ­தற்கு பல­சந்­தர்ப்­பங்­க­ளில் ஆத­ர­வுக்­க­ரம் கொடுத்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, பல­வி­த­மான விமர்­ச­னங்­கள், வசை­மா­ரி­கள், கீழ்­மைத்­த­ன­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆளா­னது. எனி­னும் தமிழ்­மக்­க­ளுக்­குப் பாத­க­மில்­லாத விமோ­ச­னம் தரக்­கூ­டிய புதிய அர­சி­யல் திருத்­தம் ஒன்றை முன்­னெ­டுப்­ப­திலே நம்­பிக்­கை­யீ­னங்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யு­டன் முன்­னெ­டுத்த முன்­மொ­ழிவு அர­சி­யல் திட்­ட­வ­ரைவு, நாடா­ளு­மன்­றில் முன்­வைக்­கப்­பட இருந்த சூழ­லிலே, கூட இருந்து ஆலோ­ச­னை­கள் அபிப்­பி­ரா­யங்­கள் வழங்­கிய குழு­வி­ன­ராக ஆட்­சி­மாற்­றத்­துக்கு வித்­திட்­டார்­கள்.

அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான செயற்­பா­டு­கள் அத்­த­னை­யும் தோற்­க­டிக்­கப்­பட்­டன. இந்த வெற்­றி­கள் ஏற்­ப­டு­வ­தற்கு தமிழ்க்­கூட்­ட­மைப்­பி­ன­தும் தமிழ்­சட்ட அறி­ஞர்­க­ளி­ன­தும் பங்­க­ளிப்பே முக்­கிய கார­ணம் என்­ப­தைப் பெரும்­பான்­மை­யி­னர் உணர்ந்­து­கொள்­ளத் தலைப்­பட்­டுள்­ள­னர். பன்­னா­டு­கள் கூட இதை அறிந்­து­கொண்­டுள்­ளன. காத்­தி­ர­மான வெற்­றிக்குக் கார­ண­மாக இருந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி சார்ந்த தலை­மை­களே நன்றி கூறி­யுள்­ளார்­கள். வலை­யில் அகப்­பட்ட யானையை சுண்­டெ­லி ­தான் காப்­பாற்­றி­யுள்­ளது.இங்கு, மூலைக்­கல் அகற்­றப்­பட்­டால் அல்­லது வில­கி­னால் கட்­ட­டம் ஆட்­டம் காணும் என்­ப­தும் தெளி­வா­னதே.

காற்­றுள்­ள­போதே
தூற்­றிக்­கொள்ள வேண்­டும்!
தேசி­யத் தலை­வ­ரின் வழி­காட்­ட­லிலே அனைத்­துத் தமிழ்க்­கட்­சி­க­ளும் இணைந்து உரு­வ­கித்த கூட்­ட­மைப்பு தமி­ழர்­க­ளின் குரல் என்­ப­தில் எந்த ஐயப்­பா­டும் இருக்க முடி­யாது. கொள்கை முரண்­பாடு என்­று­கூறி ஒரு­சி­லர் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து செயற்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் மட்­டில் அவர்­கள் பிரிந்து செயற்­ப­டு­வது சரி­யான செயற்­பாடு எனக் கார­ணங்­களை எடுத்­துக்­கூ­றி­னா­லும் தமி­ழ­ரின் ஒற்­று­மையை உடைக்­கும் அல்­லது வலு­வி­ழக்­கச் செய்­யும் செய­லா­கவே அது தென்­ப­டு­கி­றது.

“ஒரு இடத்­திலே நில்­லா­த­வன் எந்த இடத்­தி­லும் நில்­லான்!’’ என்று அன்று சிறு­ப­ரா­யத்­தில் எங்­க­ளைக் கற்­பித்த ஆசி­ரி­யர் ஒரு­வர் குறிப்­பிட்­ட­தற்­கான விளக்­கத்­தை­ யும் தெளி­வை­யும் இப்­போது கண்­டு­கொள்ள முடி­கி­றது. “இருக்­கும் இடத்­தை­விட்டு இல்­லாத இடம்­தேடி” என்ற சினி­ மாப்­பா­டல் வரி­கள் முடி­வில் “ஏதும் அறி­யா­த­வர்” என்று அமை­யும். மாற்­றங்­கள் வழியே சென்­றால்­தான் இலட்­சி­யத்தை அடை­ய­லாம். காலத்தை நடை­மு­றை­க­ளைக் கருத்­தில் எடுத்து, எமது மக்­க­ளுக்­கான நகர்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் பொழுது எமது மண்ணை, எமது கலா­சா­ரத்தை, மொழியை, பண்­பாட்­டைச் சீர்­கு­லைக்­கும் முன்­னெ­டுப்­புக்­க­ளைக் கூட்­ட­மைப்­பி­னர் ஒரு­போ­தும் விட்­டுக் கொ­டுக்­கா­மல் செயற்­ப­ட­வேண்­டும்.

அர­சோடு சேரா­விட்­டா­லும் கூட்­ட­ மைப்­பின் ஆத­ரவு விலக்­கிக் கொள்­ளப்­ப­டும்­போது நல்­லாட்சி அர­சைத் தொட­ர­மு­டி­யாது போகும். எனவே தமிழ்­மக்­கள் சார்ந்து பிரச்­சி­னை­களை இடித்­து­ரைத்து தீர்­வு­க­ளைப் பெறு­வ­தற்­கான சந்­தர்ப்­பம் கனிந்­துள்­ளது. கால இழுத்­த­டிப்­புக்­க­ளுக்கு இட­ம­ளிக்­காது, காற்­றுள்­ள­போதே தூற்­றிக் கொள்­ளும் கன­கச்­சி­த­மான செயற்­பா­டு­களே தமி­ழர்­க­ளுக்கு தேவை­யா­னது என்­பதை உணர்ந்து இவர்­கள் செய­லாற்ற முன்­வர வேண்­டும். வாய்­வார்த்­தை­க­ளில் மயங்கி ஏமாற்­ற­ம­டை­யாது தீர்­மா­னிப்­ப­வர்­க­ளான நீங்­கள் தீர்க்­க­மான செயற்­பாட்­டுக்கு முன்­வா­ருங்­கள்.

ஆளுக்­கொரு பக்­கம் சென்­றால்
தமி­ழர்­க­ளுக்கு இழுக்கு!
இது­வரை மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சு­க­ளெல்­லாம் தமிழ்­மக்­களை ஏமாற்­றியே தப்­பிப் பிழைத்­துக்­கொண்­டன. தமி­ழர்­க­ளுக்கு உரித்­தான அவி­ருத்­திச் செயற்­பா­டு­களைத் தடை­செய்து வந்­தன. கார­ணம் ‘சுக்­கான்’ அவர்­கள் கையி­லேயே இருந்­தது. தமது செல்­வாக்­கைப் பெற்­றுக்­கொள்­ளும் நடை­மு­றை­களே இது­வரை பின்­பற்­றப்­பட்­டு­வந்­தன. இப்­போது அந்­தச் ‘சுக்­கான்’ தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கையில் அகப்­பட்­டுள்­ளது. இனி­வ­ருங்­கா­லங்­க­ளி­லும் தமிழ்த் தரப்­பின் ஆத­ரவு இல்­லா­மல் தனி­யாட்சி நடத்­து­வ­தென்­பது கடி­ன­மான கைங்­க­ரி­யம். எனவே ஆயு­தத்­தால் சாதிக்­கா­ததை காகி­தத்­தால் சாதிக்­க­லாம். மோதிச்­சா­திக்க முடி­யா­ததை வாதிட்­டுச் சாதிக்­க­லாம்.

தமி­ழர் ஆத­ரவு தேவை­யில்லை என்ற நிலை மாறி, தமி­ழர் ஆத­ரவே வெற்­றி­யைத் தீர்­மா­னிக்­கும் என்ற நிலை­மாற்­றம் தமி­ழ­ரின் திற­மைக்கு எடுத்­துக்­காட்­டா­கும். அடம்­பன் கொடி­யும் திரண்­டால் மிடுக்கு! ஆளுக்­கொரு பக்­கம் சென்­றால் தமி­ழர்­க­ளுக்கு இழுக்கு! மக்­களை விலக்கி வாழ்ந்­தால் அவர் விலை­போ­வார். மக்­க­ளுக்­கா­கவே வாழ்­ப­வர் அவர்தம் மனக் கோவில்­க­ளில் இறை­யாய் நிலை பெறு­வார்.

பண்­டார வன்­னி­யன் இருந்­தால் காக்கை வன்­னி­ய­னும் இருக்­கவே செய்­வான். கட்­டப்­பொம்­மன் இருந்­தால் எட்­டப்­ப­னும் இருக்­கவே செய்­வான். இதுவே தமி­ழர்­க­ளின் வர­லாறு. எங்­க­ளு­டைய திறமை மீது எங்­க­ளுக்கு நம்­பிக்கை இருந்­தால் எங்­களை எவ­ருமே வீழ்த்­தி­விட முடி­யாது. இது குடும்ப, சமூக, பொரு­ளா­தார மற்­றும் அர­சி­யல் சூழ­மை­வு­க­ளுக்கு ஏற்­பு­டை­யது. சிறு­வட்­டத்­துக்­குள் நின்­று­வி­டாது பரந்­து­பட்­டுச் சிந்­திக்­க­வேண்­டும். அறி­ஞர்­கள், கல்­வி­மான்­கள், திற­மை­யா­ளர்­கள் இருந்­தும் ஒன்­று­பட்­டுச் செய­லாற்ற முடி­யா­மல் பிரிந்­து­நின்று மல்­லுக்­கட்­டு­கி­ன்றோம். இந்­த­ நிலை மாற்­றம் பெற வேண்­டும். ஒன்­று­ப­டும் காலமே உயர்­வுக்கு வழி­யா­கும். நாமக மாறி நமக்­கொரு வழி­ ச­மைப்­போம்.

You might also like