தொடரந்து அழும் குழந்தையை- சமாளி்ப்பது எப்படி?

0 22

குழந்தை வளர்ப்பில் மிகவும் சவாலான காலகட்டமே குழந்தை பிறந்த முதல் ஆறு மாத காலம்தான். கை குழந்தையின் அழுகைக்கு காரணம் தெரியாமல் அனுபவமில்லாத அம்மாக்கள் திண்டாடி விடுவார்கள்.

எதற்கு அழுகிறது என்று புரியாமல், கையில் எடுத்து வைத்துக் கொண்டு, பால் புகட்டி, தோளில் போட்டு தட்டி… என என்ன செய்தாலும் குழந்தைகளின் அழுகை ஓயாது. கையில் வைத்திருக்கும் போதே தூங்கிய பிள்ளையை தொட்டில் போட்டதும் அழத் தொடங்கிவிடும்.

பொதுவாகவே பிறந்த குழந்தைகள் 4 மணிநேரம் அழுவது என்பது இயல்பானது. விடாமல் அழுகும் குழந்தையை சமாளிப்பது எப்படி என்று பார்க்கலாமா.

பசி

‘குழந்தை பசி கொள்ளி பசி’ என்பார்கள். பசி வந்தால் பத்தும் பறந்து விடும் சில நேரங்களில் குழந்தைகள் பசிக்காக அழுதாலும் வாயில் பாலை வைத்தால் குடிக்காமல் கத்தி கத்தி அழுவுமே தவிர பசி தீர குடிக்காது. இதற்கு ஒரே தீர்வு முக்கால் மணிநேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக பால் கொடுத்து கொண்டே இருங்கள்.

ஆடைகள்

குழந்தைகக்கு இறுக்கமான ஆடைகள், உறுத்தும் கால் கொழுசு மற்றும் அரைஞான் கயிறுகளை போடாதீர்கள். இதனால் குழந்தைகள் விடாமல் அழுவார்கள்.

களைப்பு

உறவினர்களின் விடாத வருகையினால் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டே இருப்பது, விடாமல் கொஞ்சி கொண்டே இருப்பதால் குழந்தைகள் அலுத்துபோய் களைத்து விடும். குழந்தை அழுகும் போது தூக்கி வைத்திருந்தால் போதும் மற்ற நேரங்களில் சுத்தமான விரிப்பில் படுக்க வையுங்கள், கையை காலை ஆட்டி அசைத்து விளையாட விடுங்கள்.

தூக்கும் போது கவனம்

குழந்தை கழுத்து நிற்காமல் இருக்கும் ஆரம்ப காலத்தில் கவனமாக தூக்குங்கள். கழுத்துக்கும் உடம்புக்கும் பிடிமானம் கொடுத்து தூக்குங்கள், இல்லையென்றால் சுளுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சுளுக்கிற்கு நானே மருத்துவம் பார்க்கிறேன் என் பார்க்காமல் உரிய மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்.

 

You might also like