நகங்களின் வடிவங்கள் சொல்லும் உங்களைப் பற்றி!!

ஒருவருடைய நகத்தின் வடிவமைப்பை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியுமா என்றால் ஆம் சொல்ல முடியும். ஒரு மனிதனுடைய குணாதிசயங்களை அவருடைய விரல் நகங்களை கூறிவிடும்.

நீளமான நகம்

நீளமான நகங்கள் இருந்தால் அவர்களின் வலதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். அதனால் அவர்களுக்கு அதிக கற்பனைத் திறன் இருக்கும். ஒரு பெரும் படைப்பாளியாக திகழும் இவர்களின் சில சூழ்நிலைகள் காரணமாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள்.

அகன்ற நகங்கள்

நகங்கள் அகலமாக இருந்தால் அது அவர்களின் இடது பக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். அதனால் அவர்களுக்கு பேச்சாற்றல் அதிகமாக இருக்கும். மனதில் நினைப்பதைத் தெளிவாகப் பேசுவதால் இவர்களின் பேச்சில் மற்றவர்கள் எளிதில் மயங்கி விடுவார்கள். ஆனால் மறுபக்கத்தில் இவர்கள் மிகவும் கோபம் மற்றும் பொறுமை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

முட்டை வடிவ நகங்கள்

முட்டை வடிவத்தில் நகங்கள் இருந்தால் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சமுதாயத்தில் அதிக பொறுப்புணர்ச்சியை கொண்ட இவர்கள் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே தீர்த்து வைப்பார்கள்.

சதுர நகங்கள்

சதுர வடிவில் நகங்களை கொண்டவர்கள் தைரியம் மற்றும் விடா முயற்சியை தனது இரு கண்களாக நினைப்பார்கள். அதனால் இவர்கள் எப்போதும் தீவிரத்துடன் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு தலைக்கனம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு தலைக்கனமே முதல் எதிரியாக இருக்கும்.

முக்கோண நகங்கள்

நகங்கள் முக்கோண வடிவில் இருந்தால் அவர்களிடம் நிறைய  சிந்தைகள் பொங்கி வழியும். மற்றவர்கள் தவறவிடும் சிறிய விடயங்களைக் கூட இவர்கள் சரியாகப் பிடித்து விடுவார்கள்.

தலைகீழ் முக்கோண வடிவில் நகம் இருந்தால் அவர்கள் எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பார்கள்.மேற்கூம்பிய முக்கோண வடிவில் நகம் இருந்தால் அவர்களை சுற்றி நடக்கும் கொடுமையான விடயங்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

கூர்மையான நகங்கள்

நகங்கள் கூர்மையாக இருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையில் உள்ள குறிக்கோளை நிறைவேற்றத் தேவையான உழைப்பைக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் சில விடயங்கள் பிடிக்காவில்லை எனினும் அவை தங்களின் வளர்ச்சிக்குத் தேவையாக இருந்தால் அவற்றைக் கட்டாயம் செய்து முடிக்கும் குணத்தைக் கொண்டவராக இருப்பார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close