side Add

நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட சில முக்கியமான வழக்குகள் நவாஸ் ஷெரீப் மீது உள்ளன. இந்த வழக்குகள் காரணமாக இவரின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் செய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியதாகவும், வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக அவரது பிரதமர் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது. அவரை நாடுகடத்தும் திட்டத்திலும் அந்நாட்டு அரசு இருந்தது.

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியிருப்பதாகவும் அவர் மீது முறைப்பாடு கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இந்த நிலையில் தற்போது பனாமா கேட் ஊழல் வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளத.அதேபோல் கணக்கில் வராத சொத்துக்களை எல்லா முடக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் செய்ய முயன்று வருகின்றனர்.

You might also like