side Add

நாடாளுமன்ற உறுப்பினரானார் சாந்த பண்டார!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான சாந்த பண்டார சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியில் எம்.பியாக நியமிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாத் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்து விட்டு கிழக்கு மாகாண ஆளுநராக பதவி யேற்றுக் கொண்டார்.

அவரது வெற்றிடத்துக்கு குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த சாந்த பண்டார ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பால் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடிய நிலையில், சாந்த பண்டார எம்.பி. பிரதி சபாநாயகர் முன்பாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

You might also like